Tuesday, November 27, 2007

மிளகாய்பொடி வீசப்பட்ட அழகி

போர்ட்டோரிக்கோ நாட்டில் நடந்த அழகி போட்டியில் மேரி நிவேரா என்ற அழகி வெற்றி பெற்றார். இவர் போட்டிக்கு வரும் போது இவரது முகத்திலும், உடலிலும், உடையிலும் யாரோ ஒருவர் மிளகாய் பொடியை தூவி விட்டார். அவரது மேக்கப்பையும் கலைத்து விட்டனர். இதனால் அவரது உடலில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதையும் சமாளித்துக் கொண்டு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் போட்டியில் கலந்து கொண்டு அவரே அழகு ராணியாக முடி சூட்டிக் கொண்டார். கண்களில் இருந்து வடியும் கண்ணீரை அவர் துடைத்த காட்சி. மேடையை விட்டு இறங்கியதும் அவசரம் அவசரமாக உடைகளை களைந்து ஐஸ்கட்டிகளை உடலில் தடவி உடல் எரிச்சலை போக்கினார்.
* அழகிப்போட்டிக்கு எதிர்ப்பு காட்ட வந்தவராக இருந்தால் வாழத்துக்கள்

தமுமுக - குவைத் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாடு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)

குவைத் நாட்டில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ''நன்றி அறிவிப்பு மாநாடு" ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை யிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜா முஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான்-எருமப்பட்டி அவர்கள் வரவேற்புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.


தலைவரின் தலைமையுரையில் "இந்த இடஒதுக்கீடு 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி " கூறினார்.



சிறப்பு அழைப்பாளராக தமுமுக-ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ்-லால்குடி அவர்களும், குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ்-நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்-புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்றுள்ள இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.



மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது. மாநாட்டிற்கு பல்வேறு இஸ்லாமிய, தமிழ், கிருஸ்த்துவ அமைப்புகளில் இருந்தும் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.



அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள், தமுமுகவினர் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. தமுமுகவின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் வரவேற்பு போஸ்டர் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்றது.


News from:
TMMK - Media Group

Kuwait

Monday, November 5, 2007

சங்கரன்கோவில் அருகே தேவர் சிலை உடைப்புகிராமமக்கள் சாலை மறியல்-கல்வீச்சு; போலீஸ் தடியடி


சங்கரன்கோவில் அருகே முத்துராமலிங்கத்தேவர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நேற்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதையொட்டி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தேவர் சிலை உடைப்பு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் வேலாயுதபுரம் கிராமம் உள்ளது. அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ரோட்டு ஓரம் தேவர் சிலை அமைத்து இருந்தனர். சிலையைச் சுற்றி கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த கம்பி வலையை உடைத்து உள்ளே புகுந்து தேவர் சிலையின் முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
சாலை மறியல்
நேற்று காலையில் தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் அங்கு ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அங்கு திரண்டு நின்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். "சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அந்த இடத்தில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்'' என்று ஊர் மக்கள் கூறினார்கள். அந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இங்கு வரவேண்டும் என்று அவர்கள் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், நெல்லை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) ராஜேந்திரன் ஆகியோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையொட்டி உடனே சமுதாய பெரியவர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

தடியடி
இதையொட்டி கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். கல்வீச்சில் போலீசார் சிலரும், தடியடியில் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பஸ் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தடியடி காரணமாக பொதுமக்கள் சிதறி ஓடியதால் அந்தப் பகுதியில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், செருப்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு அந்தப் பகுதியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல், வேலாயுதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதனால் ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராஜ பாளையம்-சங்கரன்கோவில் சாலை விலக்கில் சிலர் மரக் கிளைகளை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. மேலும் அய்யனார்புரம் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக நெல்லைக்கு செல்லும் அனைத்து பஸ்களும் முறம்பு வண்டிகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நேற்று சிலர் கடைகள் மீது கல்வீசியதால் அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஏழாயிரம்பண்ணையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் இ.ரெட்டியபட்டியில் சிலர் சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டியில் இருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சாத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிஜி பிரதமரை கொல்ல ராணுவம் சதி - 11 பேர் கைது

தெற்கு பசிபிக்கடல் பகுதியில் உள்ள நாடு பிஜி. ஏராளமான இந்தியர்களும் இங்கு வசிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு அரசியல் நெருக்கடிகள் தொடருகிறது.
இப்போது அங்கு பிரத மராக இருப்பவர் பிராங்க் பைனிமராமா. 2006-ம் ஆண்டு புரட்சி நடத்தி இவர் ஆட்சியை கைப்பற்றினார். 2009-ம் ஆண்டு அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் பைனிமராமாவை கொலை செய்யபயங்கர சதிதிட்டம் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள சில அதி காரர்களும் இந்தசதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி ராணுவ அதிகாரிகள், வீரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டவர் ஒருவர் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் பிஜி தீவில் 4 முறை புரட்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Monday, October 29, 2007

தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?

நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. தென்காசிக்காக மீட்டிங். தென்காசியில் மீட்டிங். இது போல் அறிவிப்பு செய்து தென்காசிக்கு அப்பால் பல ஊர், பல மைல்கள் தாண்டி கூட்டம் போட்டு தென்காசி என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விளம்பரம் தேடும் கூட்டம் ஒரு புறம். உண்மையை எழுதினால் எதை எழுதினாலும் விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்ற அறிவுரை ஒரு புறம். விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்று எழுதும் உள்ளங்களின் எண்ணம் நல்ல எண்ணம். போல் தோன்றலாம். ஆனால் அது இஸ்லாம் காட்டிய வழி அல்ல. நன்மையை சொல்லுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை அல்ல. நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அபுஜஹ்லை விமர்சிக்கவில்லை. அவனது துரோகச் செயல்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டவில்லை என நிரூபித்து விட்டால். தன்னை அபுஜஹ்லை விட மோசமானவன் என்று சொன்னவனை நாம் விமர்சிப்பதையும் அவனது சமுதாய விரோத செயல்களையும் அடையாளம் காட்டாமல் விட்டு விடுவோம்.மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமா? வேண்டாமா? சிந்தியுங்கள்.
கோத்ரா ரெயிலை எரித்து விட்டு அதைக் காரணம் காட்டி குஜராத்தில் நடந்த மோடி ஆட்டம் பற்றி டெஹல்கா செய்தி வெளியிட்ட உடன் அதை பலர் திரும்பத் திரும்ப மெயிலாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தன்னை அபுஜஹ்லை விட மோசமானவன் என்று சொன்னவன் கோத்ராவில் முஸ்லிம்கள்தான் ரெயிலை எரித்தார்கள் என்று 2002இல் சென்னை நேதாஜி நகர் பள்ளியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசினான். ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டே குற்றச்சாட்டு வைத்தான். அப்பொழுது அபுஜஹ்லை விட மோசமான அவனின் அந்தப் பேச்சை நாம் மட்டுமே கண்டித்து விமர்சித்து மெயில் அனுப்பினோம். இன்று மோடியின் சதி திட்டம் அம்பலம் ஆன பிறகு மோடிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவனாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறான். போராட்டங்களையும் அறிவித்து இருக்கிறான். அபுஜஹ்லை விட மோசமான இவனை, இந்த சமுதாய துரோகியை விமர்சித்து மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமா? வேண்டாமா? சிந்தியுங்கள். தென்காசி மக்கள் மன நிலைகள் வேறு விதமாக உள்ளது.
தென்காசி பிரச்சனைகளுக்கு வருவோம். தென்காசியில் இந்து முன்னணி குமார பாண்டியன் கொலை. த.மு.மு.க. மைதீன் சேட் கான் அவர்களை கொலை செய்ய முயற்சித்து நடந்த கொலை வெறி தாக்குதல். இரண்டு அணி மோதலில் அணிக்கு மூவர் வீதம் 6 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் தென்காசி பிரச்சனை என இன்றைய அரசும் இப்போதைய அரசு அதிகாரிகளும் எண்ணி உள்ளார்கள். எனவே இந்த அளவிலேயே அவர்கள் பார்வை உள்ளது. தென்காசி மக்கள் மன நிலைகள் வேறு விதமாக உள்ளது. நோன்புப் பெருநாளையொட்டி தென்காசிக்கு சென்றிருந்தோம். அப்பொழுதும் அதற்குப் பிறகும் தென்காசிவாசிகளிடம் பேசியதில் கிடைத்த தகவல்கள் இதோ. நேரம் இல்லாதவர்கள் கூட்டத்துக்கு வரக் கூடாது.ஓவ்வொரு கலவரத்தின் போதும் பீஸ் கமிட்டி எனும் பெயரால் கூட்டம் போடுகிறார்கள். அது சம்பிரதாயத்துக்காகவே கூட்டப்படும் கூட்டமாகவே இருக்கிறது. எந்த பயனும் இல்லை. பீஸ் போனவர்களை அழைக்கிறார்கள். பீஸ் கமிட்டி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை அழைக்கிறார்கள். பீஸ் கமிட்டி கூட்டம் என்றால் சமாதான கூட்டம் என்று கூட தெரியாமல் அது பரம்பரை பதவி என எண்ணக் கூடிய முட்டாள்களையும் அழைக்கிறார்கள். ஓட்டுக்காக இரண்டு பக்கமும் நடிப்பவர்களை அழைக்கிறார்கள். இத்துப் போன செத்துப் போன கபுரடி மண்ஷhக்களை அழைக்கிறார்கள். ஆக கூட்டுவது சமாதானத்தின் பெயரால். ஆனால் ஏற்படுத்துவதோ பிரச்சனையை. கூட்டுவது சமாதானக் கூட்டம் என்றால் அரசினரும் அதிகாரிகளும் நேரம் எடுத்து வர வேண்டும். நேரம் இல்லை எனில் கூட்டத்தைக் கூட்டக் கூடாது. அல்லது நேரம் இல்லாதவர்கள் கூட்டத்துக்கு வரக் கூடாது.
யாரையும் மனம் திறந்து பேச விடவில்லை.26.10.07 தென்காசியில் பீஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. அமைச்சர், கலெக்டர், எஸ்.பி. எம்.எல்.ஏ. என கலந்த கொண்ட அந்தக் கூட்டத்தில் யாருக்கு நேரம் இல்லையோ தெரியவில்லை. இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனவே விரைவாக முடிப்பதாகக் கூறி உள்ளார்கள். இதை பி.ஜே.பி.யினர் விமர்சித்துள்ளனர். கூட்டியது சமாதானத்தின் பெயரால். ஏற்படுத்தியதோ பிரச்சனையை. கூட்டத்தில் அங்கே பாலம் கட்ட வேண்டும் இங்கே ரோடு போட வேண்டும் என முனிசிபல் கூட்டத்தில் பேசுவது போல் பேசினார்கள். யாரையும் மனம் திறந்து பேச விடவில்லை. மக்கள் மன நிலைகளை அறிந்து அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்க வேண்டும். மக்கள் விருப்பப்படி அவர்களை மனம் விட்டுப் பேச விட வேண்டும். மனம் திறந்து பிரச்சனைகளை பேசினால்தான். மனதில் உள்ளதை உள்ளபடி கொட்டினால்தான் உரிய தீர்வு காண முடியும். இதை உணர்ந்தவர்களாக கூட்டம் நடத்துபவர்கள் இல்லை.உள்ளதை உள்ளபடி பேசுகிறவரை மேடை ஏற விடாமல் தடுத்து விடுகிறார்கள்.இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்து. எங்கும் மனம் திறந்து பேசுகிறவர்களை, உள்ளதை உள்ளபடி பேசுகிறவர்களை பேச விடுவதில்லை. நாங்கள் ஐஸ் வைக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே அதிகாரிகளை அமைச்சர்களை, கலெக்டாகளை, எஸ்.பி, எம்.எல்.ஏ.க்களை ஐஸ் வைத்து பேசும் போலிகள்தான் பீஸ் கமிட்டி கூட்டம் எனும் பெயரால் நடத்தப்படும் கூட்டங்களில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு அமைப்பின் மேடையாக இருந்தாலும் ஒருவர் உள்ளதை உள்ளபடி பேசுவார் என்றால் சதி திட்டங்கள் மூலம் உள்ளதை உள்ளபடி பேசுகிறவரை மேடை ஏற விடாமல் தடுத்து விடுகிறார்கள். இது நாம் கண்ட அனுபவமும் கூட.
அனைவரும் வேடதாரிகளாகவே இருக்கிறார்கள்.இன்னொரு மீட்டிங் இப்தார் நிகழ்ச்சியாக ஐக்கிய ஜமாஅத் எனும் பெயரில் கொலைக் குற்றத்தில் சிறை தண்டனை பெற்றவரைக் கொண்டு முஸ்லிம்கள்(?) நடத்தினார்கள். அதில் பேசிய சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்குரிய பாபரி மஸ்ஜிதை இந்துக்கள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். உட்சாக மடையர்களான சில முஸ்லிம்கள் இதை எஸ்.எம்.எஸ். பண்ணி பரபரப்பாக பரப்பி இருக்கிறார்கள். அதற்கு பதில் அனுப்பிய ஒரு அறிவாளி பாபரி மஸ்ஜிதை கட்டிக் கொடுக்க வேண்டாம். அதை வட நாட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தென்காசியில் உள்ள முஸ்லிம்களுக்குரிய பள்ளியை முஸ்லிம்கள் கட்ட தடையாக இருப்பவர்களில் இந்த சாமியாரும் ஒருவர். ஐக்கிய ஜமாஅத்தின் இப்தார் கூட்டத்pல் சாமியார் பேசியது மனம் திறந்த பேச்சா? அப்படியானால் தென்காசியில் உள்ள பள்ளியை முஸ்லிம்கள் கட்ட தடையாக உள்ளவர்களிடம் பேசி சரி செய்யட்டும் என கூறி இருக்கிறார். உடனே அந்த சாமியாரிடம் போய் பேசி இருக்கிறார்கள். முடியாது என்று கூறி விட்டார். ஆக சமாதனத்தின் பெயரால் கூடுபவர்கள் அனைவரும் வேடதாரிகளாகவே இருக்கிறார்கள்.
அப்பொழுது இருந்த நியாயமான அதிகாரிகள். தென்காசி பிரச்சனை இன்று நேற்று தோன்றியது அல்ல. 1969 ஆம் ஆண்டு தென்காசி பசாரின் பொது இடத்தில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து கோயில் உருவாக்கினார் காங்ரஸ் கட்சியில் இருந்த சொர்ணத் தேவர்; என்பவர். யார் இந்த சொர்ணத் தேவர்.? இவர்தான் இந்து முன்னணி குமார பாண்டியனின் தந்தை. அன்று காங்ரஸ் கட்சியில் இருந்தார். உடனே முஸ்லிம்கள் தரப்பில் போட்டிக்கு ஒரு தர்கா கட்டினார்கள். பிரச்சனை எழுந்தது. தென்காசி வரலாறு காணாத அளவுக்கு கலவரம் வெடித்தது. முஸ்லிம்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது. சொத்துக்கள் அழிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த நியாயமான மேல் அதிகாரிகள் தர்காவையும் அப்புறப்படுத்தினார்கள். சொர்ணத் தேவர் தென்காசி பசாரின் பொது இடத்தில் கட்டிய பிள்ளையார் சிலையையும் அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே அமைதி திரும்பியது. தென்காசியை இந்து முஸ்லிம் கலவரக் காடாக ஆக்கியது.1986 ஆம் ஆண்டு செய்யது குருக்கள் தாதா பீர் (உருதுவில் தாதா என்றால் பாட்டனார்) எனப்படுவோர் எடுத்து வந்த முஹர்ரம் பஞ்சா வழக்கம்போல் தென்காசியில் வலம் வந்தது. இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பது தனி விஷயம். அப்பொழுது எம்.எல்.ஏ.வாக இருந்த காங்ரஸ் கட்சியைச் சார்ந்த வக்கீல் வெங்கட்ரமணன் வீடு இருக்கும் தெற்கு ரத வீதியில் வந்து கொண்டிருந்தது பஞ்சா. காங்ரஸ் கட்சியைச் சார்ந்த வக்கீல் வெங்கட்ரமணன் எம்.எல்.ஏ வீட்டு வாசலுக்கு வந்ததும் அந்த வீட்டிலிருந்து செருப்பு வந்து விழுந்தது. அப்பொழுது அந்த வீட்டினுள் இருந்தவர் சொர்ணத் தேவர். இவர் யார்? இவர்தான் இந்து முன்னணி குமார பாண்டியன் தந்தை. இதை மீண்டும் உங்கள் நினைவில் கொள்ளுங்கள். அன்று காங்ரஸ் கட்சியில் இருந்தார். அந்த செருப்பு வீச்சு தென்காசியை இந்து முஸ்லிம் கலவரக் காடாக ஆக்கியது. அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.இந்த சம்பவத்தை ஒட்டி நாம் செய்த முயற்சியால் முஹர்ரம் பஞ்சா தென்காசியில் தடை செய்யப்பட்டது. மேலப்பாளையம் பஞ்சாவில் சிலம்பாட்டம் தடை செய்யப்பட்டது. http://mdfazlulilahi.blogspot.com/2007/01/blog-post_18.html முஹர்ரம் பஞ்சா தடை செய்யப்பட்டது நல்ல காரியம்தான். ஆனாலும் எம்.எல்.ஏ வீட்டிலிருந்து செருப்பு வீச்சு. பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு. முஸ்லிம் பெண்களைப் பார்த்து முக்கால் உனக்கு எதற்கு முழுசும் நான் தாரேன் என போட்ட கோஷங்கள். இப்படியான இந்த ரணங்கள் இன்னும் முஸ்லிம்களிடம் ஆறவில்லை. எம்.எல்.ஏ வீட்டிலிருந்து செருப்பு வீசி விட்டு செய்த அந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் கடைகள் சூறையாடப்படன. மரத்திலான சொருகு கதவுகள்தான் அப்பொழுது இருந்தன. ஒவ்வொரு கடைகளிலும் அந்த சொருகு கதவுகளைத் தவிர எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றனர். முஸ்லிம்களின் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை.கூனி சாயப்பட்டறை. நக்கி ரைஸ் மில் ஏ.1 பீடி குடோன் என முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களும் போலீஸார் முன்னிலையிலேயே சூறையாடப்பட்டன.
அழிக்கப்ட்டன கடை வீதிகளிலிருந்தவைகளுக்குத்தான் இந்த கதி என்றால் முஸ்லிம்களின் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. அம்பை ரோட்டில் சுடலை மாட சாமி கோயில் பின் புறம் உள்ள சுக்கன் மதார் அவர்களுக்கு சொந்த மான தென்னந் தோப்பு. பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தோப்புகள். இப்படி முஸ்லிம்களுக்கு சொந்தமான தேங்காய் மாங்காய் தோப்புகள். அனைத்தையும் குறி வைத்து கொள்ளை அடித்துச் சென்றதுடன். அவைகளை அழித்தும் சென்றனர். கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு அதைக் காரணம் காட்டி குஜராத்தில் நடந்த மோடி ஆட்டத்திற்கு முன் மாதிரியே தென்காசிதான் என்று சொன்னால் மிகையாகுமா? 100 வயதுடைய பெரிய கொடி மரம்.தென்காசி அச்சன் புதுரில் உள்ள முஸ்லிம்கள் ஊர்க்கந்தூரி எனும் பெயரால் ஆண்டு தோறும் கொடி ஏற்றம் செய்வார்கள். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களில் ஒன்று என்பது தனி விஷயம். இதற்காக 100 வயதுடைய பெரிய கொடி மரம் ஒன்றும் இருந்தது. 100 வருடமாக உள்ள அந்த கொடி மரத்தை இந்து தேசம் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த சுப்ரமணி ஐயர் என்பவர் இந்து மதத்தின் பெயரால் உரிமை கொண்டாடினார். இப்பொழுது இந்து மக்கள் கட்சி எனும் பெயரால் உள்ள அந்தக் கட்சி அப்பொழுது இந்து தேசம் கட்சி என்ற பெயரில் இருந்தது. அச்சன் புதூர் முஸ்லிம் இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டனர்.1986 ஆம் ஆண்டு பஞ்சா மீது செருப்பு வீசி வம்பிழுத்தவர்களின் பின்னணிதான் இது என்பதை உணர்ந்த அச்சன் புதூர் முஸ்லிம் இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டனர். 100 வருடமாக கொடி ஏற்றி வரும் அந்த கொடி மரத்தை விட்டுக் கொடுப்பதாக இறங்கி வந்தனர். இப்படி துவங்கிய பேச்சு வார்த்தையில் 2 பேருக்குமே அந்த மரம் வேண்டாம்.
இனி இந்து தேசம் கட்சியை சார்ந்த சுப்ரமணி ஐயர் அச்சன் புதூருக்குள் நுழையவேக் கூடாது என உடன்படிக்கை செய்தனர். இந்த உடன்படிக்கைப்படி 100 வயதுடைய அந்த பெரிய ஊர்க்கந்தூரி கொடி மரம் வெட்டி அடியோடு அகற்றப்பட்டது. வேரும் வேரடி மண்ணும் அடையாளம் இல்லாமல் அகற்றப்பட்டது. டி.எஸ்.பி. ராகவாச்சாரியார் தனது வீட்டோ பவரை பயன்படுத்தினார்.அப்பொழுது டி.எஸ்.பி.யாக இருந்த ராகவாச்சாரியார் நடுநிலையாளர் போல் காட்டிக் கொண்டார். உள்ளுக்குள் இந்து தேசம் கட்சி சுப்ரமணி ஐயருக்கு ஆதரவாகவே செயல்பட்டார். கொடி மரம் வெட்டப்பட்ட பிறகும் சுற்று வட்டாரங்களில் இந்து தேசம் கட்சியின் சுப்ரமணி ஐயர் பிரச்சனைகளை உருவாக்கினார். பிரச்சனைகளுக்கு காரணமான இந்து தேசம் கட்சியின் சுப்ரமணி ஐயர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அளவுக்கு டி.எஸ்.பி. ராகவாச்சாரியார் தனது வீட்டோ பவரை பயன்படுத்தினார். அவரைப் பற்றிய நல்லெண்ணக் குறிப்பை எழுதி வைத்து விட்டார். தென்காசியிலிருந்து மாற்றலாகிய டி.எஸ்.பி. ராகவாச்சாரியார் கோவைக்குப் போனப் பிறகுதான் அங்கும் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டன. செக் போஸ்ட்கள் உருவாகின. முதலில் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்தார்கள்.1994இல் தென்காசி இலஞ்சி குமாரசாமி கோயில் தேருக்கு தீ வைக்கப்பட்டது. தீ வைத்தவர்கள் யார் என்று காவல் துறை ஆய்வு செய்யும் முன்பே பச்சைத் துரோகிகளான முனாபிக் லீக்கின் தென்காசி பொறுப்பாளன் மண்ஷh என்பவன் ஜாக் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது பழி சுமத்தினான்.
1994 ஆகஸ்டு 28இல் நடந்த ஜாக் இஜ்திமா நோட்டீஸை கொடுத்தான். அது தேரின் அருகில் கிடந்தது என்றான். அதனால் ஜாக் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் அதிகாரிகள் பிடித்தார்கள். நியாயமான மேலதிகாரிகள் தலையிட்டு முதலில் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்தார்கள். ரோஸ் மஹாலில் பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.இலஞ்சி குமாரசாமி கோயில் தர்மகர்த்தா தேர்தலில் பழையவர்கள் தோற்று புதியவர்கள் வந்துள்ளார்கள். தேக்கு மரத்திலான தேரில் உள்ள பல தேக்குகளை பழைய தர்மகர்த்தாக்கள் விற்று இருக்கிறார்கள். அது கண்டு பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்குள் உள்ள தகராறில் அவர்களே தீவைத்துக் கொண்டார்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. தமிழக அளவில் நடக்கவிருந்த மிகப் பெரிய கலவரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. பச்சைத் துரோகிகளான முனாபிக் லீக்கின் தென்காசி பொறுப்பாளன் மண்ஷh மூஞ்சில் கறி பூசப்பட்டது. மேலப்பாளையம் ஜாக் சார்பில் காவல் துறைக்கு நன்றி போஸ்ட்டர்கள் ஒட்டினோம். நன்றிக்குரிய போலீஸ் அதிகாரிகளுக்கு ரோஸ் மஹாலில் பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.பொய் குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.அதே கால கட்டத்தில் பாண்டியன் என்பவரது கடையின் கூரைக்கு தீ வைக்கப்பட்டது.
தீ வைத்தவர்கள் யார்? முஸ்லிம் இளைஞர்கள்தான் தீ வைத்திருப்பார்கள் என்ற ரீதியில் போலீஸாரின் பார்வையை திருப்பி விட்டார்கள். நியாயமான அதிகாரிகளின் பார்வை மிகச் சரியான வழியில் போனது. கடையின் கூரைக்கு தீ வைக்கப்பட்ட பாண்டியன் என்பவர் இன்சூரன்ஸ் பேங்கில் லோன் எடுத்து இருக்கிறார். அதை கட்ட முடியாத பாண்டியன் திட்டத்தில் வந்ததே இந்த தீ. அவரே அவர் கடைக்கு தீ வைத்தார் என்பதை நியாயமான அதிகாரிகள் கண்டு பிடித்தார்கள். முஸ்லிம் இளைஞர்கள் மீதான பொய் குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். நடக்கவிருந்த கலவரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது முனாபிக் லீக்கின் தென்காசி பொறுப்பாளன் மண்ஷh மூஞ்சில் கறி பூசப்பட்டது.மய்யத் லீக்கினர் ஒரு முடிவுக்கும் வரவில்லை.
இதே கால கட்டத்தில்தான் முஸ்லிம்களே உங்கள் கடைகளை காலி செய்யுங்கள் இல்லையேல் உங்களை கொலை செய்வோம். இப்படிக்கு இந்து தேசம் கட்சி என்று முஸ்லிம் கடைகளுக்கு கடிதங்கள் வந்தன. இந்துக்களே உங்கள் கடைகளை காலி செய்யுங்கள் இல்லையேல் உங்களை கொலை செய்வோம். இப்படிக்கு முஸ்லிம் தற்கொலைப் படை. இப்படி இந்து கடைகளுக்கு கடிதங்கள் வந்தன. முஸ்லிம் கடைகளுக்கு வந்த கடிதங்கள் சம்பந்தமாக மய்யத் லீக்கினர் ஒரு முடிவுக்கும் வரவில்லை. ஆனால் இந்து கடைகளுக்கு வந்த கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து கடைக்காரர்கள் போலீஸில் கம்ளைண்ட் கொடுத்து விட்டனர். உடனே முஸ்லிம் இளைஞர்கள் பிடிக்கப்பட்டனர். அதன் பிறகுதான் மய்யத் லீக்கினர் முஸ்லிம் கடைகளுக்கு வந்த கடிதங்களை போலீஸில் கொடுத்தார்கள்.
அன்றும் ஒரு கலவரத்தை தென்காசி சந்தித்து இருக்கும்.முஸ்லிம் கடைகளுக்கு வந்த கடிதங்களிலுள்ள எழுத்துக்களும் இந்து கடைகளுக்கு வந்த கடிதங்களிலுள்ள எழுத்துக்களும் ஒரே மாதிரியாக இருந்துள்ளதை போலீஸார் கண்டார்கள். அதன் பிறகுதான் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்தி முறையான ஆய்வு செய்தனர். இதை எழுதியவன் இட்லி கடை குமார் என கண்டு பிடித்தனர். கோயில் அருகில் இட்லி கடை வைத்துக் கொண்டு விபச்சார தொழில் செய்ததால் அவனை காலி செய்ய இந்துச் சகோதரர்கள் முயற்சி செய்துள்ளனர். எனவே கலவரத்தை தூண்டி அவர்களை பழி வாங்க இட்லி கடை குமார் முயற்சி செய்துள்ளான். இந்துக் கடைகளுக்கும் கடிதம் அனுப்பியதால்தான் விரைவில் உண்மை வெளி வந்தது. இல்லையெனில் அன்றும் ஒரு கலவரத்தை தென்காசி சந்தித்து இருக்கும்.
இப்படிப்பட்ட தென்காசியில் சமீப காலமாக மீண்டும் கலவரங்கள் வர குமார பாண்டியன் கொலைதான் காரணம் என்பது போல் படம் காட்டப்படுகிறது. உண்மை அதுவல்ல.தென்காசியில் மீண்டும் கலவரங்கள் வர காரணமாக ஆனது.களவாடிய பத்திரிக்கைக்காரனும் இது மாதிரிதான் செய்தி வெளியிட்டுள்ளான். அவன் பொய்யன் என்பது உலகறிந்த உண்மை. மத துவேஷங்களை தூண்டி குளிர் காய எண்ணிய சமூக விரோதிகள் சதி திட்டம் போட்டார்கள். முஸ்லிம் பெண்களை குறி வைத்து இழுத்துச் சென்று விடுவது என்பதுதான் அவர்கள் போட்ட அந்த சதி திட்டம். அவர்கள் திட்டப்படி பல முஸ்லிம் பெண்களை இழுத்துச் சென்றார்கள். முஸ்லிம் பெண்களை இழுத்துச் செல்லும் செயல்களை முன்னின்று செய்தவர்கள் இந்து முன்னணியினர். தலைமை வகித்தது குமார பாண்டியன். நூர்ஜஹான் ஆண்டாள் ஆனாள். நவ்ஷத்நிஸா ரஞ்சிதாவாக ஆனாள். என போட்டோவுடன் பத்திரிக்கையிலே செய்தி வெளியிட்டார்கள். அவற்றை தென்காசி பசார் வீதிகளில் ஒட்டினார்கள். இந்த செயல்கள்தான் தென்காசியில் மீண்டும் கலவரங்கள் வர காரணமாக ஆனது. ஒவ்வொரு சமுதாயமும் அடையாளம் காண வேண்டும்.
இதனைச் சொல்லிக் காட்டி முஸ்லிம் இளைஞர்களை சில மவுலவிகள் உசுப்பி விட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களின் மானப் பிரச்சனையாக ஆக்கினார்கள். இன்று ஜிஹாது பெயரால் இருப்பவர்களில் இருவர் குமார பாண்டியன்களுக்கு துணை நின்றவர்கள்தான் என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்கள் தரப்பில் உள்ளது. முஸ்லிம் என்பவன் நியாயத்தையே பேச வேண்டும். இன உணர்வு பார்ப்பவன் இஸ்லாமியனே இல்லை என இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். சொந்த விரோதத்தில் மோதி விட்டு அதற்கு மதச் சாயம் பூசி ஆதாயம் தேடுபவர்களை ஒவ்வொரு சமுதாயமும் அடையாளம் காண வேண்டும்.ஒவ்வொரு நோக்கம் இருந்திருக்கிறது.
எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர் கட்சியாக ஆகி விட்டால் கலவரம் வராதா என ஏங்குபவைகளாகவும். கலவரத்தை தூண்டக் கூடியவைகளாகவும்தான் உள்ளன. அது மாதிரிதான் சொந்த விரோதத்தில் மோதி விட்டு அதற்கு மதச் சாயம் பூசி ஆதாயம் தேடுபவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் ஒவ்வொரு நோக்கம் இருந்திருக்கிறது. தென்காசி பிரச்சனைக்குரியதாக ஆகும்பொழுதெல்லாம் அதன் சுற்று வட்டாரங்களில் வியாபாரம் நன்கு பெருகி இருக்கிறது. எனவே இப்பொழுது தென்காசியின் சுற்று வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த வியாபாரிகள் இந்த மத வெறியர்களை தூண்டி வருகிறார்கள். எனவே இதையும் ஒவ்வொரு சமுதாயமும் அடையாளம் காண வேண்டும். எது எப்படியோ இன்று தென்காசி பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்திய நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பி.ஜே.பியும் இந்து முன்னணியும் தென்காசியை மதப் பிரச்சனையாக ஆக்கி வருகிறது. அதனால் எதிர் தரப்பு உலகளாவிய பிரச்சனையாக ஆக்கி வருகிறது. தீவிரவாதத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என பகிரங்கமாகக் கூறி விட்டு அந்தரங்கத்தில் அதுதான் இஸ்லாம் என பரப்பி வருபவர்கள் இருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ. என்ற பாகிஸ்தான் உளவு அமைப்பு இந்தியாவில் ஊடுறுவி இந்திய பொருளாதாரத்தை அழிக்க, ஒழிக்க, சீரழிக்க முயற்சி செய்கிறது. இது புதிய ஒன்று அல்ல. இந்தியாலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததிலிருந்து உள்ள பிரச்சனை அது. ஐ.எஸ்.ஐ. யின் தீவிர வாதம் மதம் சார்ந்தது அல்ல. ஐ.எஸ்.ஐ. இந்தியர்களைத்தான் பாகிஸ்தானிகளைப் போல் காட்டி பலி இடுமே தவிர பாகிஸ்தானிகளை களத்தில் இறக்காது. ஆனால் அல் கொய்தா அப்படி அல்ல. அவர்களே களத்தில் இறங்குவார்கள்.
தென்காசி பிரச்சனை உலகளாவிய அல் கொய்தா பிரச்சனையாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் விருப்பப்படி அவர்களை மனம் விட்டுப் பேச விட வேண்டும். மனம் திறந்து பிரச்சனைகளை பேசினால்தான். மனதில் உள்ளதை உள்ளபடி கொட்டினால்தான் தென்காசி பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முடியும்.

Wednesday, October 17, 2007

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்!

முத்துப்பேட்டையில் செல்போன் நீசார்ஜ் கடை வைத்திருப்பவர் நஜிமுதீன். இவரது கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த சங்கர் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட கைகலப்பு ஏற்படுகிறது அப்போது அந்த வழியாக வந்த பி.ஜே.பி. நகர செயலாளர் மாரிமுத்து சங்கருக்கு ஆதரவாக பிரச்சனையில் ஈடுபடுகிறார். இதையடுத்து தாக்கப்பட்ட நஜிமுதீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார். ஆனால் 50க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் காவல் நிலையத்தில் தயாராக நிற்கிறது. விஷயமறிந்து தமுமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் தீன் முஹம்மது காவல் நிலையத்திற்கு சென்றார். புகார் கொடுக்க வந்தவரை தாக்க முனைந்த சங்பரிவார் கும்பலிடம் இருந்து நஜீமுதீனை அழைத்து வருகிறார்.

ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.

சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்படுகிறது.

இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த FIR நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரையும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் தீன்முஹம்மது, கலவரத்தை ஆரம்பித்த சங்பரிவார் கும்பலையும் அதற்கு பின்புலமாக இருக்கும் மகேஷ், கருப்பு, மாரிமுத்து போன்றவர்களை கைது செய்யாமல் அப்பாவிகளை அதுவும் அடுத்த மாதம் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து வரும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை சட்டரீதி யாக பிணையில் எடுக்க முயற்சிகள் செய்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் விட்டு விடும் போக்கினால்தான் முத்துப் பேட்டையில் அவ்வப்போது கலவரம் நடக்கிறது என்றார்.

முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் கூறுகையில்
''கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இதற்குக் காரணம் பிரச்சி னையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பி.ஜே.பி., இந்து முன்னணி குறிப்பாக பி.ஜே.பி. மாவட்டச் செயலாளர் கருப்பு போன்றவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளையும், சம்பந்தமில்லா தவர்களையும் கைது செய்வது காவல் துறையின் வாடிக்கையாகி விட்டது. முத்துப்பேட்டையில் பல ஆண்டு களாக அடிக்கடி நடைபெறும் கலவரத் திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
  • இந்த ஆண்டு 3.1.2007 அன்று மாலை 4 மணிக்கு மன்னார்குடியில் கோட்டாட்சியரால் அழைக்கப்பட்டு நடந்த சமாதானக் கூட்டத்தில் ஏற்பட்ட எழுத்துமூலமாக சமாதான உடன்படிக்கை யின்படி 'முஸ்லிம் ஜமாத்' தரப்பினர் நடந்து கொண்ட பிறகும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • ஒவ்வொரு கலவரத்தின் போதும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று காவல்துறை அறிந்தும் அவர்களைக் கைது செய்யாமல் அப்பாவிகளை இரவு நேரங்களில் கைது செய்வதையும் அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.
  • பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு சரியான நிவாரணத்தை (இழப்பீடு) அரசு வழங்க வேண்டும்
  • காவல் நிலையம் எதிரிலேயே ஒரு முஸ்லிம் சகோதரரின் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு சமூக விரோதிகளின் அராஜகம் அசுர வளர்ச்சி அடைந்திருப் பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
  • முத்துப்பேட்டை நகர பகுதியில் எப்போதுமே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டால் கூட சம்பந்தமே இல்லாமல் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வரும் பேருந்தில் பயணிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் மீது பி.ஜே.பி. வகையறாக்களால் அடிக்கடி நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர்.


இந்நிலையில் அக்டோபர் 15 அன்று மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முத்துப்பேட்டைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி தலைமையில் தமுமுக குழு ஒன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து முத்துப்பேட்டை நிலைமைகளை எடுத்துரைத்து நியாயம் வழங்கக் கோரியது.
தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து முத்துப்பேட்டை நிலவரங்களை எடுத்துக் கூறினர். அப்பாவிகளைக் கைது செய்வது பிரச்சினைக்கு எவ்வகையிலும் தீர்வு தராது என்பதை அவர்கள் எடுத்துரைத்து, கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினர்.


சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?

நன்றி:www.tmmk.in

குவைத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாசிஸ இந்தி வெறியர்களைக் கண்டித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம். குவைத் - மிர்காப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை உணவகத்தில் 5-10-2007 இரவு 10 மணிக்கு துவங்கப்பட்ட இப்பொதுக்கூட்டம் நள்ளிரவு 12-30 வரை நடைபெற்றது. குவைத் நாட்டில் பரவலாக வசித்து வரும் தமிழ் உணர்வாளர்களும், சமுதாய ஆர்வளர்களும் எதிர்பாராவண்ணம் பெருந்திரளாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பி்த்தனர். இப்பொதுக்கூட்டத்தை கலீல் அஹமது பாகவீ அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். வந்திருந்தவர்களை சகோ. நிஜாம்தீன் அவர்கள் வரவேற்றார்கள். சகோ. கா. ரஹ்மத்துல்லாஹ்-தலைவர் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் அவர்கள் தலைமையேற்றார்கள். முன்னிலை ஷாஹின்ஷா-சென்னை புளியந்தோப்பு நகர செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்இ சிறப்புரையாக டாக்டர். கே.எஸ். அன்வர் பாஷா-தலைவர்- குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். ஏ.எம்.ஏ. தீன் - குவைத் அமைப்பாளர் திமுக, முஹம்மது இக்பால் - பாட்டாளி மக்கள் கட்சி, அன்பரசன் – செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள், ஆர். கே. சரவணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாஞ்சில். சுரேஷ் - அகில இந்திய காங்கிரஸ், கலீல் அஹமது பாகவீ - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம். இராவணன் - பெரியார் சுயமரியாதை இயக்கம், அமானுல்லாஹ் – தலைவர், தமுமுக மற்றும் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ஏபிசி நஜீர், மார்க்கப் பிரச்சாரகர் தாஜ்தீன், அமீர் பாட்சா- திருச்சி மாவட்ட துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவர்களும் கலந்து கொண்டார்கள். அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதிக்கச்சக்திகளின் சதிவேலைகளையும், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த இராமவிலாஸ் வேதாந்தி அவர்கள் மீதான கண்டனத்தையும் அழுத்தமாகவே பதிவு செய்தனர். ரமலான் மாதத்தில், இஸ்லாமிய நாட்டில், மார்க்கக் கூட்டங்களுக்கு மத்தியில் கடைந்தெடுத்த அரசியல் கூட்டமாக நடைபெற்றது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடல்லாமல் இக்கூட்டத்தைத் தவற விட்டவர்கள் வருத்தப்படுமளவிற்கு மிகவும் விறுவிறுப்பாகவும், அனல் பறக்கும் கருத்துக்களோடும் நடந்த இக்கண்டனக் கூட்டத்திற்கு நன்றியுரை – புத்தாநத்தம் அப்துல் நாஸர் அவர்கள் வழங்க தேநீர் விருந்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.

Monday, August 27, 2007

கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 2

19 பேர் படுகொலை: போலீசாரே போராட்டத்தில் இறங்கியதால், நகரில் சட்டம் ஒழுங்கு மேலும் மோசமடைந்தது; பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அப்போது, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள் செல்வராஜ் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.,தண்டபாணியின் கார் எரிக்கப்பட்டது; அவரும் தாக்கப்பட்டார். நகரின் பல இடங்களில் நடந்த வன்முறையில் வெட்டுப்பட்டு பலத்த காயத்துடன், சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது; அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரையும் மீறி, இச்சம்பவம் நடந்தது. இது போன்று மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில், 19 பேர் கொலை செய்யப்பட்டனர். வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் இறுதி ஊர்வலத்தில் "அல்உம்மா'வினர், பங்கேற்றனர்,

கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 1

கடந்த 1997, நவ.,29. "அல்உம்மா'வினர் மூவர், கோவை உக்கடம் வழியாக பைக்கில் சென்றனர். அங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் ஒரு போலீஸ்காரர்; மூவரையும், அவர் பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். இவர்களை மீட்க ஆதரவாளர்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார் அல்உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி. அப்போது அங்கிருந்த எஸ்.ஐ.,க்கும் அன்சாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிடிபட்ட மூவரையும் விடுவிக்க இயலாது என போலீசார் கூறியதை தொடர்ந்து, அன்சாரியும் ஆதரவாளர்களும் அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் உக்கடம் பகுதிக்கு வந்த "அல்உம்மா'வினர், அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் செல்வராஜை, சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதையடுத்து, கோவை நகர் முழுவதும் பயங்கர கலவரம் மூண்டது. உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நடைபாதை கடைகள், வியாபார நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நகரமே வன்முறை காடாக மாறியது; மறுநாளும் கலவரம் தொடர்ந்தது. போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டதால், அதிர்ச்சியடைந்த போலீசாரில் ஒரு பகுதியினர், நவ., 30 காலையில் ஸ்டேட் பாங்க் ரோடு திருச்சி ரோடு சந்திப்பில் "திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்; தமிழக வரலாற்றில் போலீசார் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட சம்பவமும் அன்று அரங்கேறியது.

Thursday, August 16, 2007

தென்காசியில் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக பாதிப்பு

கோஷ்டி மோதலில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட தென்காசியில், நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசியில் காசி விஸ்வநாதசுவாமி கோவில் எதிரே இடம் வாங்கி, முஸ்லிம்கள், மசூதி ஏற்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி குமார்பாண்டியன் வெட்டிக்கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மைதீன்சேட்கான் வெட்டப் பட்டார். பழிவாங்கும் நடவடிக்கையால் பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. தென்காசி கூலக்கடை பஜாரில் இருதரப்பும் நேருக்கு நேராக நேற்று முன்தினம் மோதியதில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பஷீர், அசன்கனி, நாகூர்மீரான் உடல்கள் நேற்று முன்தினம் இரவில் அடக்கம் செய்யப்பட்டன. குமார்பாண்டியனின் சகோதரர்கள் செந்தில், சுரேஷ், சேகர் ஆகியோரது உடல்கள் இலஞ்சி ரோட்டில் முக்கூடல் பாலம் அருக நேற்று தகனம் செய்யப்பட்டது.

தென்காசியில் நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் ஓடின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வன்முறை சம்பவங்கள் இல்லை. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தென்காசியில் பாரதிய ஜனதா துணைத்தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறுகையில், அரசின் நடவடிக்கை இன்மைதான் கொலைகளுக்கு காரணம். தவறு செய்பவர்களுக்கு அரசு ஆதரவாக உள்ளது. உளவுபிரிவின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.' என்றார்.

Tuesday, August 14, 2007

தென்காசியில் கலவரம்: 6 பேர் படுகொலை கடைகள் அடைப்பு-பதட்டம்

இன்று காலை 10 மணிக்கு நடந்த இந்த பயங்கர சம்பவம் நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை வெட்டி கொன்றனர்.

ரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.

இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.

அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.

இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நன்றி: மாலைமலர்

Thursday, August 9, 2007

திருச்சி மண்டல ஆஃபீஸில் அறிமுகம் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 16 மாவட்டங்கள் உள்ளன. பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதனால் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டநெரிசல் என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. புரோக்கர்களின் தொல்லையும் தவிர்க்க முடியாதாக இருந்து வந்தது.பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வருபவர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விவரம் தெரியாமல் புரோக்கர்களிடம் பணத்தை இழந்து வந்தனர்.

அதைக்கண்டு 1999ல் பாஸ்போர்ட் அலுவலராக இருந்த ரவி, பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில், வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1999 முதல் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ.20 மட்டும் கட்டணமாக பெற்று வந்தனர். மூன்று மாதம் முன் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். "காலதாமதம் தான் லஞ்சத்துக்கு வழி வகுக்கிறது' என்பதை உணர்ந்த அவர், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழி செய்தார்.
பாஸ்போர்ட் காலதாமதமின்றி கிடைத்ததால், அதற்காக லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தது.விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஏற்படும் தேவையில்லாத செலவினம் குறைக்கவும், தினமும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.லாப்டாப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களால் லாப்டாப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக, திருச்சியில் தான் இத்தகைய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இம்முறையால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்; விண்ணப்பதாரர் இனி மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ. 50ஐ முன்னாள் ராணுவத்தினர் கட்டணமாக வசூலிக்கின்றனர். திருச்சியில் மூன்று நாட்களாக இரண்டு லாப்டாப் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் முன்னாள் ராணுவத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.

லாப்டாப் மூலம் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முன்னாள் ராணுவத்தினர், ""லாப் டாப்களை திறந்த வெளியில் வைத்து பதிவு செய்யும் பணி மேற்கொள்வதால், துசி, மழை, காற்று, வெயில் போன்றவைகளால் லாப்டாப் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக ஷெட் போட்டுக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்,'' என்று கூறினர்.

கவனம் தேவை புதிய வைரஸ்

கடந்த சில வாரங்களாக ரோபாட் (Robot) என்ற பெயரில் புதிய வைரஸ் ஒன்று இமெயில் வழியாக உலவி வருகிறது. உங்களுடைய இன்டர்நெட் முகவரியை மையமாகக் கொண்டு வேண்டத்தகாத செயல்களெல்லாம் நடைபெறுகிறது என்றும் அதற்கு வைரஸ் ஒன்றுதான் காரணம் என்றும் இமெயில் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த வைரஸினை நீக்க உங்களுக்கு இலவசமாக பேட்ச் பைல் ஒன்று அனுப்பவா என்று கேட்கப்படும். பதறிப்போய் இலவசம் தானே என்று ஓகே கொடுத்தவுடன் பேட்ச் பைல் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த பேட்ச் பைலினை நீங்கள் செயல்படுத்தாவிட்டால் விரைவில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் தடுக்கப்பட்டு உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த பேட்ச் பைலை நீங்கள் கம்ப்யூட்டரில் அமைத்தவுடன் அதன் வழியாக ட்ரோஜன் வைரஸ் ஒன்று கம்ப்யூட்டரில் விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் windev72b5203e.sys என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொள்கிறது. இதற்கு Trojan.Packed.13, W32/ Nuwar@MM, Worm:Win32/ Nuwar.JT மற்றும் Mal/DorfA என்ற பெயர்களும் தரப்படுகிறது. இது வழக்கம்போல உங்கள் முகவரி புக்கில் இருக்கிற வர்களுக்கு இந்த வைரஸை அனுப்புகிறது. உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களை இந்த வைரஸ் அனுப்பியவர்களுக்கு அனுப்புகிறது. எனவே இது போன்ற எச்சரிக்கை இமெயிலில் வந்தால் அதை அலட்சியப் படுத்தி அழித்து விடுங்கள்.

Monday, August 6, 2007

திரவுபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம்

விடுதலை சிறுத்தை அமைப்பு பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில், கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் இன்று ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இது குறித்து மாவட்ட செயலாளர் இமயவரம்பன் கூறுகையில், ""திரவுபதி அம்மன் கோயில் தொடர்பான வழக்கு சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்பும் நுழைய முடியாதபடி கோயிலுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இருதரப்பும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஆலய நுழைவு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மேற்கு மண்டல செயலாளர் தமிழமுதன், ஆதவன், தமிழ்வேந்தன், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Wednesday, August 1, 2007

கோவை குண்டு வெடிப்பு:

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படு காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கம் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உம்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு நலன்கருதி கோவை மத்திய சிறை அருகே இருந்த நூலக கட்டிடமே தனிக்கோர்ட்டாக மாற்றப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது. ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். இதையொட்டி கோவை நகர், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. காலை 9.45 மணி அளவில் 6 போலீஸ் வேன்கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் நீதிபதி உத்திராபதி தனிக்கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கிய அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது அறைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அரசு, எதிர்தரப்பு வக்கீல்களும் சென்றனர். காலை 10.20 மணி முதல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணி, அணியாக வந்தனர். 15 பேர், 15 பேராக அழைத்து வரப்பட்டனர். 10.30 மணிக்கு அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


தீர்ப்பு விவரம் வரு மாறு:-
முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்கத் தலைவர் பாட்சா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அதில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து பத்து பத்து பேராக அழைத்து அவர்கள் மீதான குற்றங்கள் குறித்து எடுத்து கூறி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மதியம் 1-30 மணி அளவில் 102 பேர் ஆஜர்படுத்தப்பட்ட தில் மதானி தவிர மற்ற 101 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
- நன்றி - மாலைமலர்

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250 பேர் படுகாய மடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தனியார் மற்றும் பொது சொத்துகள் சேதமடைந்தன. இச் சம்பவம் தொடர்பாக அல்உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி, மைசூர் வெடிமருந்து வியாபாரி ரியாசுர் ரகுமான் உள்ளிட்ட 168 பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து, இரு தரப்பு வக்கீல்கள் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தனி நீதிமன்றம் அறிவித்திருந்தது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்படுவதால் கோவை நகர் முழுவதும் இன்று ரெட் அலர்ட் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதலே நகரில் உச்சகட்ட டென்ஷன் நிலவியது.

கோவை பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே சோதனைச்சாவடி அமைக்கப் பட்டு கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக தணிக்கை செய்யப்பட்ட பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மத ரீதியான பதற்றம் நிறைந்த உக்கடம், கோட்டை மேடு, என்.எச்., ரோடு, பிலால் எஸ்டேட், மஜீத்காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், போத்தனுõர் மற்றும் கெம்பட்டி காலனி, பூ மார்க்கெட், செல்வபுரம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, குனியமுத்துõர், சுந்தராபுரம் பகுதிகளில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு முதலே ரோந்து சுற்றி வந்தனர். இதுதவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை மத்திய சிறைக்கு அருகில் உள்ள தனிக் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புடன் தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி காலை 10 மணிக்கு கோர்ட்டுக்குள் வந்தார். வந்த உடனேயே அவர் குற்றவாளிகள் பட்டியலை அறிவிக்கத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 153 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 14வது குற்றவாளியாக இருந்த கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மீதமுள்ள 7 பேரில் ஒருவர் ஏற்கனவே அப்ரூவர் ஆகி விட்டார். ஒருவர் சிறையில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். 5 பேருக்கு வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அப்துல் நசீர் மதானி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஆவார். மதானி விடுதலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பாலக்காட்டில் பட்டாசுகள் வெடித்து மதானியின் விடுதலையை தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
- நன்றி : தினமலர்

Monday, July 30, 2007

மதுரை ஜெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை ஆயுதப்படை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அதிகாலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் மதுரையில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளது என்றும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இது பற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு, பழங்காநத்தம் போலீஸ் குடியிருப்பு, தெற்குவெளியில் உள்ள கிரைம் பிராஞ்ச், திடீர்நகர் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்று தெரியவந்தது. இருப்பினும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.15 மணிக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசியவர் மதுரை ஜெயில் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க இருக்கிறது. இதனால் ஏராளமானோர் பலியாவார்கள் என்று கூறிவிட்டு தனது போனை துண்டித்துவிட்டார். இந்த போன் மிரட்டல் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வெடிகுண்டு போலீஸ் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீடுகளில் இருந்தவர்களை உடனே வெளியேற்றி விட்டு வீடு, வீடாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வீடுகளின் அருகே உள்ள தோட்டப்பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. திட்டமிட்டு யாரோ வீண் வதந்தியை கிளப்பிவிட்டு இருப்பது தெரியவந்தது.

சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பா.ம.க. கடமையாகும்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களின் பா.ம.க பொதுக்குழு கூட்டம், திருச்சி சிதம்பரம் மகாலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரா.தாமோதரன் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பா.ம.க அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மாநாடுகளை நடத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வழி காட்ட மாவட்டம் தோறும் இளைஞர் மாநாடு நடத்தப்படுகிறது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லை. இதற்காக மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி பரிந்துரைகளை மத்திய-மாநில அரசுகள் அமல் படுத்த வேண்டும். இவர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்திய ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ், ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பாட்டாளி மக்கள் கட்சியின்கடமையாகும். இதற்காக வருகிற 25-ந்தேதி திருச்சியில் வாழ்வுரிமை மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அரசியல் வரலாற்றிலேயே திருப்புமுனை மாநாடாக அமையும். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் மு.இசக்கி, மாநில நிர்வாகிகளான இளைஞர் சங்க செயலாளர் த.அறிவுச்செல்வன், மாணவர் சங்க தலைவர் கி.பாரிமோகன், மகளிர் சங்க துணை செயலாளர் செல்வி, இளைஞர் சங்க துணை செயலாளர் வே.செந்தில் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கா.முஸ்தபா, மேற்கு தலைவர் செ.சு.பார்த்தீபன், கிழக்கு தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர்கள் (மேற்கு) ரா.ஜான் ரஸ்கின், (தெற்கு) இளமாறன், (கிழக்கு) ரா.ச.சக்தி, முன்னாள் மாநில துணை தலைவர் கேசவ ராமலிங்கம், துணை பொது செயலாளர் ப.முத்து உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் உறந்தை க.உமாநாத் வரவேற்று பேசினார். இறுதியில் தமிழக மாணவர் சங்க பொறுப்பாளர் ம.பிரின்ஸ் நன்றி கூறினார்.

நந்திகிராமில் மீண்டும் வன்முறை:

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டங்களில் குதித்தனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் பலியானார்கள். மேலும், போலீசாருக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான விவசாயிகள் போராட்ட குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

சில வார கால அமைதிக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. நந்திகிராமில் ஒரு கால்வாய் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விவசாயிகள் போராட்ட குழுவினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, மற்றொரு இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இரண்டு பேரை மார்க்சிஸ்ட் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நந்திகிராமில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மண்டல கமிட்டி அலுவலகத்தை விவசாயிகள் போராட்ட குழுவினர் சூறையாடினர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் 50 பேர் காயம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும், போலீஸ் தடியடியை கண்டித்து இன்று 12 மணி நேர பந்த்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தங்கள் கட்சியை சேர்ந்த 3 பேரை விவசாயிகள் போராட்ட குழுவினர் கடத்தி சென்று விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Sunday, July 29, 2007

பாலஸ்தீனின் அவல நிலைக்கு ஆதாரக்காரணம்

1948-ம் வருடம் மே மாதம் 14-ம் தேதிதான் இஸ்ரேல் பிறந்தது என்றபோதும் அந்த வருடம் மார்ச்சிலேயே ஆட்சி எப்படி இருக்கவேண்டும், என்ன மாதிரியான நிர்வாக அமைப்பை நிறுவவேண்டும் என்று யூதர்களின் சமூகத் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்திருந்தார் கள். அரபு தேசங்களுக்கு நடுவில் அமையும் தேசமாக இருந்தபோதும், அந்த தேசங்களின் அரசியல் அமைப்புச் சாயல் ஏதும் தன்னிடம் இருந்துவிடக் கூடாதென்பதில் இஸ்ரேல் ஆரம்பம் முதலே மிகத் தெளிவாக இருந்தது.
மார்ச் மாதம் முதல் தேதி முதன் முதலில் மக்கள் மன்றம் என்றொரு அதிகாரபூர்வ அமைப்பை நிறுவினார்கள். யூதர்களின் தேசியக் கமிட்டியிலிருந்து இந்த மக்கள் மன்றத்துக்குப் பிரதிநிதிகளை நியமித்தார்கள். இந்த மக்கள் மன்றம்தான், இஸ்ரேல் உருவானதும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தளித்தது.
இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை 'நெஸட்' (Knesset) என்று குறிப்பிடுவார்கள். ஹீப்ரு மொழியில் 'நெஸட்' என்றால் சட்டம் இயற்றும் இடம் என்று பொருள். இதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். ஆரம்பகாலத்தில் நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தன. கிட்டத் தட்ட மன்னராட்சி போலவே தோற்றமளிக்கும் படியான அதிகாரங்கள். பிறகு இந்த அதிகாரங்களில் கொஞ்சம் நீதிமன்றத்துக்குப் போனது. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் பிரதம மந்திரியின் வசம் தஞ்சம் புகுந்தது.
ஒரு சம்பிரதாயத்துக்காக அதிபர் என்றொருவரை இஸ்ரேல் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தவிர! இஸ்ரேலில் ஒரு கட்சி ஆட்சி என்கிற வழக்கம் என்றைக்குமே இருந்ததில்லை. எப்போதும் ஜேஜே என்று குறைந்தது பதினைந்து இருபது கட்சிகளாவது சேர்ந்துதான் நாடாளுமன்றத்தை வழி நடத்தும். ஒரு கட்சி நாடாளுமன்றத் துக்குள் நுழையவேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1.5 சதவிகிதமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.
கூட்டணி அரசு என்றாலும் உறுதிமிக்க கூட்டணியாகத்தான் எப்போதும் இருக்கும். ஏனெனில் கட்சி வேறுபாடுகள் இருப்பினும் யூத இனம் என்கிற ஓரம்சத்தால் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுவார் கள். இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பிணைப்பு! நம் ஊரில் செய்வதுபோல நினைத்துக்கொண்டாற்போல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பிரதமரைக் கவிழ்ப்பதெல்லாம் இஸ்ரேலில் முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் தர்ணா நடத்தினாலும் நடக்காது. அதிபரே விரும்பினாலும் பிரதமரை மாற்ற முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்று நாடாளு மன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கலாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இந்தக் காரியத்தை ஆத்மசுத்தியுடன் செய்தால், பிரதமர் தனியாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கப் போரடித்து தானாகவே ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்!
இஸ்ரேலின் இந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இப்படி நடந்திருக்கிறது. 2000-வது வருடம் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக் (Ehud Barak) பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, விரட்டப் பட்டிருக்கிறார். மற்றபடி இஸ்ரேலில் ஒரு பிரதமரை மாற்றுவது என்பது, அமெரிக்காவில் அதிபரை மாற்றுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம். இம்மாதிரியான ஏற்பாடு எதற்காக என்றால், சர்வதேச அளவில் தன்னை யாரும் சரிவர அங்கீகரிக்காத நிலையில், உள்நாட்டிலும் எப்போதும் குழப்பம் சூழ்ந்தவண்ணமே இருந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான். என்னதான் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றாலும் அக்கம்பக்கத்தில் தோழமையுடன் ஒரு புன்னகை செய்யக்கூட இஸ்ரேலுக்கு யாரும் கிடையாது. பெரும்பாலான ஆசிய தேசங்களும் இஸ்ரேலின் பாலஸ்தீன விரோத நடவடிக்கைகளை முன்னிட்டுத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே தான் இருக்கின்றன. தனித்து நின்று போராடி வாழ்ந்தாக வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்குத் தொடக்ககாலம் முதலே இருந்து வருவதால், ஆட்சிமுறையில் இப்படியான சில இரும்புத்தனங்களைச் செய்துகொண்டார்கள். ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்து விட்டால், என்ன ஆனாலும் அவர் சொல்பேச்சு கேட்பது என்பதுதான் இஸ்ரேலியர்களின் இயல்பு. தவறு செய்கிறாரென்று தெரிந்தாலும் தமக்குள் பேசிக்கொள்வார்களே தவிர, பொதுவில் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். அரசாங்கம் அங்கே மீடியாவை மிகவும் போஷாக்குடன் வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாகப் பத்திரிகைகள், நாளிதழ்கள். யூதப் பத்திரிகைகள் அங்கே இழுத்து மூடப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது. ஓடாத பத்திரிகைகள் கூட நூலக ஆர்டரின் பேரில் உயிர்வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். சுமார் 25 தினசரிப் பத்திரிகைகள் இஸ்ரேலில் இருக்கின்றன. அவற்றுள் 11 ஹீப்ரு மொழிப் பத்திரிகைகள். நான்கு அரபுமொழிப் பத்திரிகைகள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹங்கேரியன், ருமேனியன், ரஷ்யன், ஜெர்மன் மொழிப் பத்திரிகைகள் தலா ஒன்று.
பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து இஸ்ரேலில் வாழத் தொடங்கிய யூதர்கள்தான் என்பதால், அந்தந்த தேசத்து மொழிகளில் ஒரு பத்திரிகையாவது இருக்கவேண்டு மென்று திட்டமிட்டு, இஸ்ரேல் அரசாங்கமே உதவி செய்து ஆரம்பித்துவைத்த பத்திரிகைகள் இவை. ஹீப்ரு மொழியின் சிதைந்த பேச்சு வழக்கு மொழியான இட்டிஷ் மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை உண்டு.
தேசம் உருவான தினம் முதல் இன்றுவரை இஸ்ரேலில், அரசுக்கும் பத்திரிகைகளுக்குமான உறவு மிக அற்புதமான நிலையிலேயே இருந்துவருவது ஓர் உலக ஆச்சர்யம். எந்த ஒரு இஸ்ரேல் தினசரியும் அரசைக் கடுமையாக விமர்சிக்காது. அதே சமயம் கட்சிப் பத்திரிகை போலத் துதி பாடுவதும் கிடையாது. செய்தியை, செய்தியாக மட்டுமே வழங்குவது என்பது இஸ்ரேல் பத்திரிகைகளின் பாணி. தன் விமர்சனம் என்று எதையும் அவை முன்வைப்பதே இல்லை பெரும்பாலும்! Yedioth Aharonoth என்கிற ஹீப்ரு மொழி செய்தித்தாள்தான் இஸ்ரேலில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை. மொத்தம் மூன்று லட்சம் பிரதிகள்.
பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட அங்கே மிக நல்ல உறவு உண்டு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று இதுவரை எந்தப் பத்திரிகை மீதும் எந்தக் காலத்திலும் யாரும் தொடுத்ததில்லை.
இஸ்ரேல் நீதிமன்றங்கள் பற்றிச் சொல்லவேண்டும். அங்கே இருவிதமான நீதி அமைப்புகள் செயல் படுகின்றன. ஒன்று சிவில் நீதிமன்றங்கள். இன்னொன்று, மத நீதிமன்றங்கள். சிவில் நீதிமன்றங்களில் வழக்கமான வழக்குகள் மட்டும் ஏற்கப்படும். திருமணம், திருமண முறிவு உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள், மதம் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும். குடும்ப கோர்ட் என்று இங்கே சொல்லப்படுவது போலத்தான். ஆனால் இஸ்ரேலில் குடும்பப் பிரச்னைகள் நீதிமன்றங்களுக்கு வருமானால் மிகவும் அக்கறையெடுத்து கவனிக்கப்படும். இஸ்ரேலில் வாழ்பவர்கள் மட்டும்தான் என்றில்லை. உலகெங்கும் வசிக்கும் யூதர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் இஸ்ரேலில் இயங்கும் நீதிமன்றங்களை அணுக முடியும்.
அடுத்தபடியாக இஸ்ரேல் ராணுவம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கொண்ட முதல்நிலைப் படை. நான்கு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொண்ட ரிசர்வ் ராணுவப்படை. விமானப்படையில் முப்பத்திரண்டாயிரம் பேர். கப்பல் படையில் பத்தாயிரம் பேர். இன்றைய தேதியில் வெளியில் தெரிந்த இஸ்ரேல் ராணுவத்தின் பலம் இதுதான். ஆனால் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் 1957 முதலே அவர்களிடம் இதே பலம்தான் இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும். ஆள்பலம் குறைவானாலும் இஸ்ரேல் தன் வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பிரும்மாண்டமானவை. உலகெங்கும் எங்கெல்லாம் மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப்ப டுகிறதோ, அங்கெல்லாம் தனது படையினரை அனுப்பி, தொடக்க காலத்தில் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள். பின்னால் இஸ்ரேலே பல தேசங்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தேசமாகிவிட்டது. இது விஷயத்தில் அமெரிக்காவின் உதவி மிகவும் குறிப்பிடப்படவேண்டியதொரு அம்சமாகும்.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவற்றைப் பயன்படுத்துவதில் பயிற்சி, போர்க்காலங்களைச் சமாளிக்கும் நிர்வாகத் திறன் பயிற்சி, ஒற்றறியும் கலையில் பயிற்சி, உளவு நிறுவனங்களை அமைத்து, கட்டிக்காத்து, வழிநடத்துவதற்கான பயிற்சி என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இஸ்ரேல் தன் பங்குக்குத் தொழில் நுட்பத்துறையில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி, அத்தேசத்தின் ஆயுத பலத்தை மிகவும் நவீனப்படுத்தியது.
அமெரிக்காவுக்கு ஒரு சி.ஐ.ஏ. மாதிரி இஸ்ரேலுக்கு ஒரு மொஸாட். உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவு நிறுவனம் என்று சொல்லப்படும் மொஸாட், இஸ்ரேலின் இரண்டாவது அரசாங்கம். நிழல் அரசாங்கம். இத்தனை வலுவான பின்னணியை வைத்துக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் பலம் இவை எதுவுமே இல்லை. மாறாக, யூதர்கள் என்று இனத்தால் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்கிற பெருமித நினைவுதான் இஸ்ரேலை இன்றளவும் உயிர்பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இன்றுவரை ஆதரிக்கும் அமெரிக்கா, நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகமே திரண்டு இஸ்ரேலை எதிர்க்கலாம். மீண்டும் அவர்கள் ஊர் ஊராக ஓட வேண்டி நேரலாம். என்ன ஆனாலும் இஸ்ரேல் மக்களை முற்றிலுமாக அழித்துவிடவே முடியாது. இன்னும் ஆயிரம் ஹிட்லர்கள் தோன்றினாலும் முடியாது. காரணம், யூதர்களின் ஒற்றுமை அப்படிப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியடிக்கத் தெரியும் அவர்களுக்கு.
இதுதான், இது ஒன்றுதான். இந்த ஒற்றுமை அரேபியர்களிடம் இல்லாததுதான் பாலஸ்தீனின் அவல நிலைக்கு ஆதாரக் காரணம்.
பாலஸ்தீன் அரேபியர்களுக்காகப் பரிதாபப்படலாம், கண்ணீர் சிந்தலாம். கவலை தெரிவிக்கலாமே தவிர, யாராலும் உருப்படியாக எந்த உதவியும் செய்யமுடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். அரபுக்களிடையே ஒற்றுமை கிடையாது.
இது இஸ்ரேலுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களின் ஒற்றுமைக் குறைபாடு உயிருடன் இருக்கும் வரை தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை யூதர்கள் அறிவார்கள்.

Thursday, July 26, 2007

வரலாறு மன்னிக்காது!

"சுரண்டல்காரர்களையும், சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கூட்டுக் கதம்பம், அரசியல் சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையாக இருக்கலாம். ஆனால், சுரண்டுபவர்களையும், சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கட்சி சமூகத்தை மறு சீரமைக்கும் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் செயல்.''
- டாக்டர் அம்பேத்கர்

அண்மையில் நடைபெற்ற மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில், 1 லட்சத்து 17,190 வாக்குகள் பதிவாகியது. நேற்று தொடங்கப்பட்ட தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் : 21,272 (மூன்றாவது இடம்). ஆனால், தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புதிய தமிழகம்' கட்சி பெற்றிருக்கும் வாக்குகள் 175. இதன் மூலம் தலித்துகள் என்ன சாதிக்க முடியும்? தேர்தல் அரசியல் கிரிமினல்மயமாகி/ஜாதிமயமாகி/லஞ்சமயமாகி விட்டது என்றெல்லாம் வாதிடலாம். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கு என்னவாக இருக்கப் போகிறது? ‘புதிய தமிழகம்' எந்த தலித் செயல்திட்டத்தை இத்தேர்தலில் முன்னிறுத்தியது? இதுபோன்ற படுதோல்விகளுக்குப் பிறகும், மீண்டும் மீண்டும் தேர்தல் அரசியலைதான் - ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வாக இவர்கள் முன்வைக்கிறார்கள். இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது.
விடுதலைச் சிறுத்தைகள், 17.6.2007 அன்று நடத்திய மண்ணுரிமை மாநாட்டில் – ‘போராளிகளுக்கு சிறப்பு' என்ற தலைப்பில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போராளிகள் : 1. அய்யா வைகுண்டர் 2. தியாகி இம்மானுவேல் சேகரன் 3. ஒண்டிவீரன் 4. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்."தாழ்த்தப்பட்ட மக்களின் தலைநிமிர்விற்காக தலைகொடுத்த போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் அய்ம்பதாமாண்டு நினைவு நாளை (செப்டம்பர் 11, 2007) தமிழக அரசு அவரது நினைவைப் போற்றும் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்'' - தீர்மானம் 17(1). "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (அக்டோபர் 30,2007) அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும்'' - தீர்மானம் 17(3). தலை கொடுத்தவருக்கும் பாராட்டு; தலை எடுத்தவனுக்கும் பாராட்டு!மாவீரன் இம்மானுவேல் சேகரனை, இதைவிட யாரும் கொச்சைப் படுத்திவிட முடியாது. மாவீரன் இம்மானுவேல் சேகரன் படுகொலைக்கு காரணமான ஒரு ஜாதி வெறியனுக்கு அரசு விடுமுறை என்று தீர்மானம் போடுவதற்காகத்தான் - இவர்கள் இத்தனை நாட்களாக விடுதலையை அடைகாத்திருக்கிறார்கள் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்? பிற சாதிகளில் இருக்கும் ஜனநாயக சக்திகளை அங்கீகரிப்பது என்ற வகையில், பேராசிரியர் கல்விமணிக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது அளிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால், ஜாதி இந்து ஆதிக்கத்தின் குறியீடாக முன்னிறுத்தப்படும் ஒருவரை அங்கீகரிப்பது - ஜாதி வெறியை நியாயப்படுத்துவதாகத்தானே பொருள். விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிக்கு மூல காரணம் மேலவளவு. ஆனால், இன்றைக்கு அதிகாரப் பங்காளிகளாக இருக்கும் அவர்கள், மேலவளவு வழக்கில் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசை நிர்பந்திக்க மறுக்கும் காரணம், தெள்ளத் தெளிவாகி விட்டது. ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்று ஒரு தலித் கட்சி இருந்தால், வரலாறு அவர்களை மன்னிக்காது.தமிழ் நாட்டில் பட்டியல் சாதியினர் என்ற தொகுப்பில் 78 (உட்) சாதிகள் உள்ளன. இதில் மூன்று சாதிகளின் பிரச்சனைகள் பற்றி மட்டுமே இன்று பரவலாகப் பேசப்படுகிறது. பிற சாதிகளின் பிரதிநிதித்துவம் பற்றியெல்லாம் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. இருப்பினும், இம்மூன்று சாதிகளும்கூட சாதி அமைப்பின் படிநிலைத் தன்மைக்கு இரையாகியுள்ளன என்பதுதான் வேதனையானது. படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்தில் கடைநிலையில் இருக்கும் அருந்ததியர்கள், தலித் (அம்பேத்கர்) கருத்தியலை தலைமையேற்று வளர்த்தெடுப்பதன் மூலம் - தற்போதைய பின்னடைவை நேர் செய்ய முடியும். ஆனால், அவர்கள் தற்பொழுதுள்ள தலித் அரசியல் கட்சிகளை அப்படியே நகல் எடுப்பதால் வந்த விளைவு, இன்று 54 அருந்ததியர் அமைப்புகள் தோன்றியுள்ளன.இந்நாட்டின் தொல்குடி மக்களை, ஆயிரக்கணக்கான சாதிகளாக கூறுபோடுவதுதான் பார்ப்பனியம். அவர்களை சாதியற்ற மக்களாக ஒன்றிணைத்து, விடுதலையை வென்றெடுப்பதுதான் அம்பேத்கரியம். தலித் இயக்கங்களின் செயல்திட்டத்தில் அம்பேத்கரியம் அச்சாணியாக இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில்தான் எதிர்காலம் இருக்கிறது.
நன்றி:

Tuesday, July 24, 2007

கொள்கை மாறா மறவனே..!

அரசியல் அரங்கில் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'உன் வெற்றி உன் கைகளில்' என்று கூறி அறுபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுக்க முடியும் என தன் சமூகத்திற்கு தெளிவுபடுத்தி, அனைத்து ஜமாஅத்துகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதற்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை எணும் பெயரிட்டு தனது இறுதிக் காலங்களில் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். தனது எழுச்சியுரையின் மூலம் தமிழின சமூகத்திற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மார்க்கத்தால் இஸ்லாமியன்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
தேசத்தால் இந்தியன்,
எனும் புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார்.
தலித் இன சமூக மக்களின் விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர்.
சிம்மாசனங்கள் அவரை சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா.
சொல்லாலும், செயலாலும், புறத்தாலும், அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..? என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இருதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது.

ஷஹீத் பழனிபாபா..

பாபா அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா.
எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னைக் கோட்டைக்குள் நுழையத் தடை என அரசானை வெளியானவுடன் தான் யார் இந்த பழனிபாபா என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக பாபா அவர்கள் மூலம் எம்.ஜி.ஆரை வசைபாட மேடை அமைத்துத் தந்தது.
எம். ஜி. ஆர். மறைவுக்குப்பின் ஆட்சியமர்ந்த திமுக, இந்து மேல் ஜாதி சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத கலைஞர் அரசு பாபா அவர்களின் மேல் முதன்முறையாக குண்டர் சட்டத்தை பிரயோகித்து சிறைக்குள் தள்ளியது.
திமுக அரசும் தனது முதுகில் குத்திய போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவா ளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்க வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), கொடிய தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.
பின்தொடர்ந்தோர் சிறிது காலம் மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை. தனது இருதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் மணம் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் அணி திரட்டினார். இந்த காலகட்டத்தில் தான் மதவெறி சக்திகளுக்கு பழியாகிய பாபா, 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு ஒன்பதரை மணிக்கு தனது வாகனமான ஜீப்பில் அமர்ந்திருந்த பாபா அவர்களை 6 பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி..,)
பாபா அவர்களின் காலத்தில் தனது வீரவுரைகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி வலியுறுத்துவார், 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல' என்பார். மாற்று மதச் சகோதரர்களின் அமைப்புகள் துணிந்த அளவு கூட நமது சமுதாயத்தின் அமைப்புகள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.
அவர் கூறிய தத்துவத்தை உள்வாங்கி இயக்கங்கள் மூலம் உண்டான பிணக்குகளை களைந்து இஸ்லாமிய சமூகத்தின் வெற்றிக்கு அல்லாஹ்வின் பாதையில் அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.
பேரருளாளன் அல்லாஹ் ஈருலகிலும் நன்மைகளை தந்தருள்வானாக..! ஆமீன்..!!

Monday, July 23, 2007

யார் இந்த பாபா...?


வெற்றிக்கும் வீரமரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன்..!
உன்னை புதைக்கவில்லை
விதைத்திருக்கின்றோம்.
உன்னில் இருந்து பூக்கட்டும்
ஆயிரமாயிரம்
புரட்சிப்பூக்கள்...!
என்றும் இறைவனின் பாதையில்
தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை
குவைத்