Wednesday, October 17, 2007

குவைத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாசிஸ இந்தி வெறியர்களைக் கண்டித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம். குவைத் - மிர்காப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை உணவகத்தில் 5-10-2007 இரவு 10 மணிக்கு துவங்கப்பட்ட இப்பொதுக்கூட்டம் நள்ளிரவு 12-30 வரை நடைபெற்றது. குவைத் நாட்டில் பரவலாக வசித்து வரும் தமிழ் உணர்வாளர்களும், சமுதாய ஆர்வளர்களும் எதிர்பாராவண்ணம் பெருந்திரளாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பி்த்தனர். இப்பொதுக்கூட்டத்தை கலீல் அஹமது பாகவீ அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். வந்திருந்தவர்களை சகோ. நிஜாம்தீன் அவர்கள் வரவேற்றார்கள். சகோ. கா. ரஹ்மத்துல்லாஹ்-தலைவர் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் அவர்கள் தலைமையேற்றார்கள். முன்னிலை ஷாஹின்ஷா-சென்னை புளியந்தோப்பு நகர செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்இ சிறப்புரையாக டாக்டர். கே.எஸ். அன்வர் பாஷா-தலைவர்- குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். ஏ.எம்.ஏ. தீன் - குவைத் அமைப்பாளர் திமுக, முஹம்மது இக்பால் - பாட்டாளி மக்கள் கட்சி, அன்பரசன் – செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள், ஆர். கே. சரவணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாஞ்சில். சுரேஷ் - அகில இந்திய காங்கிரஸ், கலீல் அஹமது பாகவீ - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம். இராவணன் - பெரியார் சுயமரியாதை இயக்கம், அமானுல்லாஹ் – தலைவர், தமுமுக மற்றும் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ஏபிசி நஜீர், மார்க்கப் பிரச்சாரகர் தாஜ்தீன், அமீர் பாட்சா- திருச்சி மாவட்ட துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவர்களும் கலந்து கொண்டார்கள். அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதிக்கச்சக்திகளின் சதிவேலைகளையும், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த இராமவிலாஸ் வேதாந்தி அவர்கள் மீதான கண்டனத்தையும் அழுத்தமாகவே பதிவு செய்தனர். ரமலான் மாதத்தில், இஸ்லாமிய நாட்டில், மார்க்கக் கூட்டங்களுக்கு மத்தியில் கடைந்தெடுத்த அரசியல் கூட்டமாக நடைபெற்றது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடல்லாமல் இக்கூட்டத்தைத் தவற விட்டவர்கள் வருத்தப்படுமளவிற்கு மிகவும் விறுவிறுப்பாகவும், அனல் பறக்கும் கருத்துக்களோடும் நடந்த இக்கண்டனக் கூட்டத்திற்கு நன்றியுரை – புத்தாநத்தம் அப்துல் நாஸர் அவர்கள் வழங்க தேநீர் விருந்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.

No comments: