கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படு காயம் அடைந்தனர்.இது தொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கம் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உம்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு நலன்கருதி கோவை மத்திய சிறை அருகே இருந்த நூலக கட்டிடமே தனிக்கோர்ட்டாக மாற்றப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது. ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். இதையொட்டி கோவை நகர், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. காலை 9.45 மணி அளவில் 6 போலீஸ் வேன்கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் நீதிபதி உத்திராபதி தனிக்கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கிய அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது அறைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அரசு, எதிர்தரப்பு வக்கீல்களும் சென்றனர். காலை 10.20 மணி முதல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணி, அணியாக வந்தனர். 15 பேர், 15 பேராக அழைத்து வரப்பட்டனர். 10.30 மணிக்கு அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு விவரம் வரு மாறு:-
முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்கத் தலைவர் பாட்சா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அதில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து பத்து பத்து பேராக அழைத்து அவர்கள் மீதான குற்றங்கள் குறித்து எடுத்து கூறி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மதியம் 1-30 மணி அளவில் 102 பேர் ஆஜர்படுத்தப்பட்ட தில் மதானி தவிர மற்ற 101 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
- நன்றி - மாலைமலர்
No comments:
Post a Comment