சங்கரன்கோவில் அருகே முத்துராமலிங்கத்தேவர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நேற்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதையொட்டி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தேவர் சிலை உடைப்பு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் வேலாயுதபுரம் கிராமம் உள்ளது. அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ரோட்டு ஓரம் தேவர் சிலை அமைத்து இருந்தனர். சிலையைச் சுற்றி கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த கம்பி வலையை உடைத்து உள்ளே புகுந்து தேவர் சிலையின் முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.

சாலை மறியல்
நேற்று காலையில் தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் அங்கு ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அங்கு திரண்டு நின்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். "சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அந்த இடத்தில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்'' என்று ஊர் மக்கள் கூறினார்கள். அந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இங்கு வரவேண்டும் என்று அவர்கள் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், நெல்லை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) ராஜேந்திரன் ஆகியோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையொட்டி உடனே சமுதாய பெரியவர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
தடியடி
இதையொட்டி கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். கல்வீச்சில் போலீசார் சிலரும், தடியடியில் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பஸ் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தடியடி காரணமாக பொதுமக்கள் சிதறி ஓடியதால் அந்தப் பகுதியில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், செருப்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு அந்தப் பகுதியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல், வேலாயுதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதனால் ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராஜ பாளையம்-சங்கரன்கோவில் சாலை விலக்கில் சிலர் மரக் கிளைகளை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. மேலும் அய்யனார்புரம் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக நெல்லைக்கு செல்லும் அனைத்து பஸ்களும் முறம்பு வண்டிகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையே சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நேற்று சிலர் கடைகள் மீது கல்வீசியதால் அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஏழாயிரம்பண்ணையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் இ.ரெட்டியபட்டியில் சிலர் சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டியில் இருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சாத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment