Monday, August 27, 2007

கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 2

19 பேர் படுகொலை: போலீசாரே போராட்டத்தில் இறங்கியதால், நகரில் சட்டம் ஒழுங்கு மேலும் மோசமடைந்தது; பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அப்போது, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள் செல்வராஜ் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.,தண்டபாணியின் கார் எரிக்கப்பட்டது; அவரும் தாக்கப்பட்டார். நகரின் பல இடங்களில் நடந்த வன்முறையில் வெட்டுப்பட்டு பலத்த காயத்துடன், சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது; அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரையும் மீறி, இச்சம்பவம் நடந்தது. இது போன்று மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில், 19 பேர் கொலை செய்யப்பட்டனர். வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் இறுதி ஊர்வலத்தில் "அல்உம்மா'வினர், பங்கேற்றனர்,

No comments: