கோஷ்டி மோதலில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட தென்காசியில், நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசியில் காசி விஸ்வநாதசுவாமி கோவில் எதிரே இடம் வாங்கி, முஸ்லிம்கள், மசூதி ஏற்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி குமார்பாண்டியன் வெட்டிக்கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மைதீன்சேட்கான் வெட்டப் பட்டார். பழிவாங்கும் நடவடிக்கையால் பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. தென்காசி கூலக்கடை பஜாரில் இருதரப்பும் நேருக்கு நேராக நேற்று முன்தினம் மோதியதில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பஷீர், அசன்கனி, நாகூர்மீரான் உடல்கள் நேற்று முன்தினம் இரவில் அடக்கம் செய்யப்பட்டன. குமார்பாண்டியனின் சகோதரர்கள் செந்தில், சுரேஷ், சேகர் ஆகியோரது உடல்கள் இலஞ்சி ரோட்டில் முக்கூடல் பாலம் அருக நேற்று தகனம் செய்யப்பட்டது.தென்காசியில் நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் ஓடின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வன்முறை சம்பவங்கள் இல்லை. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தென்காசியில் பாரதிய ஜனதா துணைத்தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறுகையில், அரசின் நடவடிக்கை இன்மைதான் கொலைகளுக்கு காரணம். தவறு செய்பவர்களுக்கு அரசு ஆதரவாக உள்ளது. உளவுபிரிவின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.' என்றார்.
No comments:
Post a Comment