Thursday, August 9, 2007

கவனம் தேவை புதிய வைரஸ்

கடந்த சில வாரங்களாக ரோபாட் (Robot) என்ற பெயரில் புதிய வைரஸ் ஒன்று இமெயில் வழியாக உலவி வருகிறது. உங்களுடைய இன்டர்நெட் முகவரியை மையமாகக் கொண்டு வேண்டத்தகாத செயல்களெல்லாம் நடைபெறுகிறது என்றும் அதற்கு வைரஸ் ஒன்றுதான் காரணம் என்றும் இமெயில் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த வைரஸினை நீக்க உங்களுக்கு இலவசமாக பேட்ச் பைல் ஒன்று அனுப்பவா என்று கேட்கப்படும். பதறிப்போய் இலவசம் தானே என்று ஓகே கொடுத்தவுடன் பேட்ச் பைல் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த பேட்ச் பைலினை நீங்கள் செயல்படுத்தாவிட்டால் விரைவில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் தடுக்கப்பட்டு உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த பேட்ச் பைலை நீங்கள் கம்ப்யூட்டரில் அமைத்தவுடன் அதன் வழியாக ட்ரோஜன் வைரஸ் ஒன்று கம்ப்யூட்டரில் விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் windev72b5203e.sys என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொள்கிறது. இதற்கு Trojan.Packed.13, W32/ Nuwar@MM, Worm:Win32/ Nuwar.JT மற்றும் Mal/DorfA என்ற பெயர்களும் தரப்படுகிறது. இது வழக்கம்போல உங்கள் முகவரி புக்கில் இருக்கிற வர்களுக்கு இந்த வைரஸை அனுப்புகிறது. உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களை இந்த வைரஸ் அனுப்பியவர்களுக்கு அனுப்புகிறது. எனவே இது போன்ற எச்சரிக்கை இமெயிலில் வந்தால் அதை அலட்சியப் படுத்தி அழித்து விடுங்கள்.

No comments: