அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..,
குவைத்தில் கடந்த 01-02-2008 அன்று மிர்காப் பகுதியில் மாவீரன் திப்பு சுல்தான் அரங்கத்தில் (தஞ்சை உணவகம்) இரவு 8-00மணிக்கு தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை ஏற்பாடு செய்த "ஷஹீத் பழனிபாபா ஓர் சரித்திரப்பார்வை" என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெருந்திரளாக வருகை தந்திருந்தனர். வந்திருந்தவர்களை பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றியசெயலாளர் சகோ. முஹம்மது இக்பால் அவர்கள் வரவேற்று அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னிலை வாத்தியார் என்றழைக்கப்படும் சகோ. அப்துல் லத்தீப் அவர்களும், தலைமை இப்பேரவையின் தலைவர் கா. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் ஏற்றனர். கம்யூனிஸ தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் புரட்சிக்கவிதை ஒன்று வாசிக்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பல்வேறு பட்ட அமைப்பினரும், சிந்தனையாளர்களின் சிறப்புரைகளோடு "இந்த அரசாங்கம் என்னை தண்டிக்கட்டும், நாளைய வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற புரட்சியாளன் பிடல்கேஸ்ட்ரோவின் வைரவரிகளோடு துவங்கிய நன்றியுரையும் அதைத் தொடர்ந்த பழனிபாபா அவர்கள் பல்வேறு தலைப்பில் ஆற்றிய உரைகளின் வீடியோ தொகுப்புகளும் ஒளிபரப்பப்பட்டது. இரவு புரட்சிகர சமபந்தி விருந்தோடு விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்ரஹ்மான், முஹம்மது அலி, பரக்கத்துல்லாஹ், பிர்தவ்ஸ் பாஷா, அமானுல்லாஹ், நாஞ்சில் சுரேஷ், அன்வர் அலி, முஹம்மது அலி ஜின்னா மற்றும் பலர் இணைந்து செய்திருந்தனர்.
No comments:
Post a Comment